BREAKING NEWS

புதிய வருமான வரித் திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு – உங்களுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா?

புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதாவது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் அல்லது சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி இல்லை. ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12,00,001 முதல் ரூ.15 ல

ட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருமானத்திற்கு 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முன்பு புதிய வரி முறையில், ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதே நேரத்தில் ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், 6,00,001 முதல் ரூ.9,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,9,00,001 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS