மக்களுடன் முதல்வர் திட்டம் ,கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தில் நடைபெற்றது
விடுபட்ட அனைத்து தாய்மார்களுக்கும் கட்டாயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இளம் தலைவர் அமைச்சர் உதயநிதி உறுதியளித்திருக்கிறார் அதைப் பற்றிய கவலையை விடுங்கள் என மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் எம் எல் ஏ உதயசூரியன் பேச்சு
ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் , கள்ளக்குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விரியூர் கிராமத்தில் நடைபெற்றது . ஆரூர் , ராமராஜபுரம் , வரகூர் ,பழையனூர் வலையாம்பட்டு, வட சிறுவள்ளூர் , கிடகுடையாம் பட்டு உள்ளிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து விரியூர் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி மைதானத்தில் தனித் துணை ஆட்சியர் குப்புசாமி முன்னிலையில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான சேவைகளை பெற மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் பெற்றுக்கொண்டு பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உடனடி தீர்வு கிடைத்திட இத்தகைய சிறப்பான திட்டங்களை நம் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இங்கே வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். மேலும், இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த ஒன்றிய குழு பெருந்தலைவர் திலகவதி நாகராஜனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் ஆவின் சேர்மன் ந. ஆறுமுகம் ,பாதர் சகாய செல்வராஜ் வட்டாட்சியர் சசிகலா பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணிதாகபிள்ளை,ஆறு .கதிரவன் எம்.பி அருள்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் கிராம உதவியாளர்கள் அனைத்து துறை சார்ந்த அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.