தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், மாநகராட்சி மேயராக திமுகவின் மகாலட்சுமி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இவரின் செயல்பாடுகள் சரி வர இல்லை என அதிமுக , பாஜக, சுயேச்சை மாமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், 22 திமுக உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்து கடந்த சில வாரங்களாகவே மேயருக்கு எதிரான செயல்பாட்டினை துவங்கியுள்ளனர்.
மேலும் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அளித்த நிலையில் இன்று விநாயகர் மகாலட்சுமி எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு விவாதம் நடைபெறும் என ஆணையர் செந்தில்முருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் கூட்டரங்கில், டி எஸ் டி முரளி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புடன், காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையர் செந்தில் முருகன் வருகையுடன் துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணி முதல் 11 மணி வரை எந்த மாமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை. 34 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரவீன் மட்டும் நேரில் வந்து ஆணையரிடம் தனக்கு அளித்த தகவல்கள் முரண்பாடாக உள்ளதாக கூறி வெளியே சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து 11.50 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் செந்தில் முருகன், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி 33 பேர் மனுவழித்த நிலையில் அது குறித்து ஒன்பதாம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
29ஆம் தேதி இது குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் இன்று எந்த ஒரு மாவட்ட உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வராத நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது என தெரிவித்தார்.