இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தினசரி சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்தது. இன்று காலை மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன், அய்யனார் கிணத்தடி விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு திரவிய பொடி மாவு பொடி சந்தனம் மஞ்சள் தேன் இளநீர் பால் தயிர் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.