வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்
வனத்துறை அனுமதி அளித்திருக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே வனத்துறை பகுதிக்குள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் அடம்:
வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம் :
நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் :
பாபநாசத்தில் பரபரப்பு :
மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவிற்கு சென்று பொதுமக்கள் தங்குவதற்கு வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று காலை பாபநாசம் வனத்துறை பாதுகாப்பு சோதனை சாவடியில் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பக்தர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை இணை இயக்குனர் இளைய ராஜாவிடம் கேட்டபோது , மிகத் தெளிவாக வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மட்டுமே பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபடவும் அங்கே தங்கி இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்த செய்தி குறிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதாகவும் இருந்த போதிலும் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் தேவையில்லாமல் வனத்துறை சோதனை சாவடிக்கு இன்று ஜூலை 30ஆம் தேதி காலையே வந்து தங்களை அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்
ஆடி அமாவாசை வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வர இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கும் வனத்துறைக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகிறது.