ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது
ஏற்காடு
அருகே உள்ள ஜெரினாகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் திருவிழாவையொட்டி இன்று மாலை அம்மன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. இன்று காலை பெரிய மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
அம்மன் வீதி உலா
தொடங்கியது இதில் செண்டை மேளம் வானவேடிக்கை
முழங்க
முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். விழாவினை கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்று சென்றனர்