ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்தாலம் காளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்தாலம் காளியம்மன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு, இஸ்லாமிய பக்தர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து வந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான விழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பால்குட ஊர்வலம் துவங்கியது நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். பால்குட ஊர்வலத்துடன் அலகு காவடி நிகழ்ச்சியும் நடைபெற்றது ரியாவுதீன் என்ற இஸ்லாமியர் பக்தர் ஒருவர் அழகு காவடி சுமந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.