BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் இன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ‌.கோட்டையில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கு பாமக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.


பொன்.கங்காதரன் மாநில இளைஞர் சங்க செயலாளர்
வேலுச்சாமி EX-MLA
தருமபுரி சண்முகம்
தஞ்சாவூர் வெங்கட்ராமன்
சேலம் ஸ்டீல் சதாசிவம்
ஷேக் முகைதீன் மாநில சிறுபான்மை பிரவு தலைவர் இவர்களின் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு பாமக நிறுவனர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். இந்த நிலையில் அதிக அளவில் இளைஞர்கள் தனது விருப்ப மனு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் குழுவினரிடம் தனது விருப்ப மனு அளித்தார்கள்.


பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முனிராஜ் மற்றும் சுரேஷ் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ஏ கே சாமி மற்றும் கள்ளக்குறிச்சி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் நகர பொறுப்பாளர்கள் கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )