மூங்கம்பட்டில் ஶ்ரீமாரியம்மன் கோயிலில் 19ம் ஆண்டு விழா!
வேலூர், ஆக.4-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மூங்கம்பட்டு கிராமம் மாரியம்மன் நகரில் 19 ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார் தலைமை வகித்தார். ஊர் நாட்டாண்மைதாரர்கள்
ஆனந்தன், முனிசாமி, பெரிய தனக்காரர்கள் விஸ்வநாதன், யுவராஜ், கோல் கார்கள் கோபி, ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாலாவது வார்டு உறுப்பினர் தமிழ் வரவேற்றார்.
வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் காலை 9 மணிக்கு அம்மன் கரக ஊர்வலமும் பகல் 11 மணிக்கு கூழ்வார்த்தலும், மற்றும் தாரை தப்பட்டை சிலம்பாட்டமும் நடைபெற்றது. அன்று மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு பொங்கல் விடுதலும் இரவு 9 மணிக்கு மின் அலங்காரத்துடன் பூ பல்லக்குடன் அம்மன் திருவீதி உலா மற்றும் கரகாட்டம் நையாண்டி மேளம் வெகு சிறப்பாக நடந்தது. நாளை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மாலை 6 மணிக்கு நடன கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சுதாகர், கோபி, பாண்டியன், சுதாகரன் சதீஷ் நேரு குமரேசன், அமர்நாத், உதயகுமார், முரளி, சுதாகர், பாலாஜி, ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.