அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா
நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட திறப்பு விழா, மறைந்த கல்வி குழும நிர்வாகிகளின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தீர்த்தபதி கல்வி குழும செயலாளர் வக்கீல் சு. கந்தசாமி தலைமை வகித்தார். சிங்கம்பட்டி சமஸ்தானம் ஜமீன்தார் சங்கராத்மஜன் தீர்த்தபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அழகிய நம்பி வரவேற்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும், சென்னை ஐ கோர்ட் முன்னாள் நீதிபதியுமான ஆர். சுப்பையாவுக்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து அவர், நூலகம், புதுப்பிக்கப்பட்ட கட்டடம், மறைந்த கல்வி குழும நிர்வாகிகளின் படங்களை திறந்து வைத்து, சிறந்த மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு சேவை புரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரின் மனைவி உமா சுப்பையா திருவிளக்கேற்றினார்.
முள்ளதாக மதுரை முன்னாள் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் ராஜாங்கம், மாவட்ட கல்வி அலுவலர் அழகு ராஜன், ஊர்க்காடு சுந்தர சுப்பிரமணிய சேது ராயர் வாழ்த்துரை வழங்கினர்.
அம்பாசமுத்திரம் சார்பு நீதிபதி செய்யது சுலைமான் உசேன், மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார், மாஜிஸ்திரேட் பல்கலைச் செல்வன், ராஜா என்ற சண்முக சுந்தரம், தீர்த்தபதி கல்வி குழும தலைவர் சிதம்பரநாதன், துணை குழு செயலாளர் தங்கபாண்டியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கணபதி, லட்சுமி நாராயண ராஜா, நம்பி சாமி துணை குழு உறுப்பினர் நம்பி ராஜன், துணை குழு தலைவர் பண்ணை சந்திரசேகரன், நெல்லை மூத்த வக்கீல் ராமநாதன், அரசு வக்கீல்கள் காந்திமதி நாதன், திருமலை குமார், முன்னாள் அரசு வக்கீல்கள் கோமதி சங்கர், பிரதாபன், குமார், வக்கீல்கள் முகமது காசிம், சாகுல் ஹமீது, காஜா முகைதீன், சஞ்சய் செல்வம், அம்பை கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் ஹனீப் உட்பட நகர பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.