கல்வி
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 05.05.2022 முதல் 13.05.2022 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு 02.05.2022 முதல் 04.05.2022 வரை நடைபெறும். முடிவுகள் 30.05.22 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.05.22க்கு முன்பாக தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் தாமதமாக நடைபெறுகிறது என்றார்
ஆனால் அடுத்த ஆண்டு முதல் எப்போதும் போல குறித்த நேரத்தில் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக பதவிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும் புகார்கள் உண்மை இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.