நீதி வழங்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நீதி வழங்க வேண்டும் இளம் நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அறிவுரை
நீதி வழங்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நீதி வழங்க வேண்டும் என இளம் நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து தற்போது 10 க்கும் மேற்பட்டவர்கள் நீதிபதியாக தேர்வாகியுள்ளனர்.அவர்களுக்கு பாராட்டு விழா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சவிதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதிதாக நீதிபதியாகியுள்ள 6 இளம் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்ராயன் கவுரவித்து அறிவுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், “புதிதாக நீதிபதியாக தேர்வாகியுள்ள 6 குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகள். உங்களை எனது குழந்தைகள் என அழைக்க எனக்கு உரிமை உள்ளது என நினைக்கிறேன்.
நீங்கள் அனைவரும் விசாரணையின்போது வழக்குக் கோப்புகளை கவனமாக படிக்க வேண்டும், அதிலிருந்து குறிப்பெடுத்து ஆராய்ந்து பார்கக் வேண்டும். நீங்கள் விசாரிக்கும் வழக்குப்போல முன்பு ஏதேனும் வழக்குகள் நடைபெற்றுள்ளதா, அதில் என்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஏதேனும் ஒரு வழக்கில் நீங்கள் முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால், தயங்காமல் உங்களது சீனியர்களை தொடர்புகொண்டு கலந்தாலோசிக்க வேண்டும். உங்களது கேள்விகளுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.