சாலை விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்தியும்,ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன பேரணி
சாலை விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்தியும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாகன பேரணி:-
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது கூரைநாட்டிலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக கேணிக்கரை பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மெக்கானிக்கல் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் வட்டாரத்து போக்குவரத்து துறை அலுவலர்கள் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.