பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் குறித்து வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை
பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் இரும்புதலை ஊராட்சியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழாவில் மருத்துவர் அறிவுரை
தஞ்சை மிட் டவுன் ரோட்டரி சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் மற்றும் இரும்புதலை,களஞ்சேரி ஊராட்சி மன்றம் இணைந்து உலக தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி
அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சி
மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் வள்ளி விவேகானந்தன், களஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தாய்சேய் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் மோகன பிரியா கலந்து கொண்டு பேசியதாவது பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் அவசியம் எனவும். குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும். தாய்மார்கள் எடுத்துகொள்ளவேண்டிய சத்துணவுகள் குறித்தும் நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள்.செவிலியர் உள்பட பலர் கலந்து கொண்டு தாய்ப்பால் அவசியம் குறித்தும் பேசினர். இந்நிகழ்ச்சியில் தஞ்சை குந்தவை மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் விஜயகுமார், மற்றும் நிர்வாகிகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இரும்பு தலை ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் பலர் செய்து இருந்தனர்.