அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது
அரியலூர் அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்ஆலயத்தில் பால்குட திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் இலையூர் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சமயபுரம்மாரியம்மன் கோயிலின் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் வீதி உலாவும் மற்றும் அலகு குத்தி பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்
முன்னதாக ஏரிக்கரையில் இருந்து புனித நீரால் நிரப்பப்பட்டு சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு பால்குடம் எடுத்தும் வான வேடிக்கையுடன் மேல தாளங்கள் முழங்க
ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அம்மனின் சன்னதி சென்றடைந்தது இதில் பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் நாட்டான்மைகள் ஊர் முக்கியஸ்தர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.