காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபட்டனர்
மேலும் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் விமர்சியாக நடைபெற்றது
இதனை தொடர்ந்து ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
இதில் ராணிப்பேட்டை சிப்காட் போக்குவரத்து. அனைத்து மகளிர் காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்
CATEGORIES ராணிபேட்டை