வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவார்ண பொருட்களை அனுப்பி வைத்த கம்பம் பகுதி பொதுமக்கள்
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவார்ண பொருட்களை அனுப்பி வைத்த கம்பம் பகுதி பொதுமக்கள் .
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தமிழகத்திலிருந்து தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நிவாரண பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தன்னார்வலர்கள் ஒன்றாக இணைந்து கம்பம் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் இருந்தும் பொதுமக்களிடம் காய்கறிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், அரிசி, வேட்டி, சேலை, பெட்ஷீட், துண்டு போன்ற சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேர்த்து வைத்துனர்.
சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் இருந்து மினி லாரியில் ஏற்றப்பட்டு தன்னார்வலர்கள் நேரடியாக வயநாடு பகுதிக்கு சென்று பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க உள்ளனர்.
மேலும் தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களில் இருந்து பெறப்படும் நிவாரண பொருட்களை வயநாடு கொண்டு சேர்ப்போம் என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.