25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது
25 ஆண்டுகளுக்கு பிறகு
மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான
முறையில் நடைபெற்றது.
திருவள்ளூரில் அமைந்துள்ள
DRBCCC மேல்நிலைப்பள்ளியில்
1997 மற்றும் 1999 ஆண்டில் படித்த மாணவர்கள்
25 ஆண்டுகளுக்குப் பிறகு
முதல் முறையாக சந்திக்கும் நிகழ்ச்சியானது கோலகாலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
முன்னாள் மாணவர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சி என்பதால்,
அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, ஒவ்வொருவரையும் தேடி அழைப்பிதழ் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து
மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் தங்களது வாழ்க்கை அனுபவங்களையும், வேலை, திருமணம், தங்களது பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் போன்ற பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு
தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும்,
பள்ளி வளாகத்தையும்,
சுற்றிப் பார்த்து பழைய மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
பின்னர்,
தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து, அவர்களை கவுரவித்து அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டும், அவர்களுடனான நினைவுகளையும் நிகழ்வில் நினைவு கூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள்
ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி
கட்டிப்பிடித்தும் அன்பை பரிமாறிக் கொண்ட
காட்சி காண்பவரே நெகிழ வைத்தது,
தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு,
மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று சந்திப்போம் என்ற உணர்வோடு கைகுலுக்கி சென்றனர்…
மேலும்
இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்வை குறித்து மாணவர்கள் தெரிவித்த போது
இப்பள்ளியில் படித்த நாங்கள்
கப்பல் உரிமையாளரும்,
தனியார் நிறுவனரும்,
மற்றும்
வழக்கறிஞர்களாகவும், தொழில் அதிபராகவும் உயர்ந்து உள்ளதாக பெருமிதம் கொண்டனர்