தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களாக அனுப்ப வேண்டாம் கேரள அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல்
ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப்பொருட்கள் டன் கணக்கில் தேங்கிக் கிடப்பதால்…!
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் அரிசி, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், ஆடைகளை நிவாரண பொருட்களாக அனுப்ப வேண்டாம் என்றும் அதை தவிர்க்குமாறு கேரள அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல்….!
வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தன்னார்வலர்கள்
தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மண்ணில் புதையுண்டவர்களைத் தேடும் பணியிலும், வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டவர்களின் உடல்களைத் தேடும் பணியிலும்
ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு வரை 391 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 187 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆறுகளிலும் சடலங்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து தன்னார்வர்கள் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலரும் அங்கு சென்று சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நாமக்கல் பகுதியில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அரிசி, பருப்பு, ஆடை என நிவாரண பொருட்களுடன் சமூக சேவையில் ஈடுபட சென்ற பொழுது அங்குள்ள அரசு அதிகாரிகள் தயவுசெய்து இங்குள்ள மக்களுக்கு உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் டன் கணக்கில் குவிந்து கிடப்பதால் தமிழகத்தை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அதை தவிர்க்குமாறும், மேலும் மீட்பு பணி முழுவதும் முடிவடைந்து நிலைமை சீரான உடன் இங்கு உள்ளவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து உதவிகள் செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் தேவைப்படுவதாகும் மீட்பு பணியில் அதிக அளவு சமூக ஆர்வலர்கள் வருவதால் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் சரியான அணுகுமுறையுடன் தங்களுக்கு தேவை என்றால் வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.