தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக படு மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை
ஓச்சேரி அடுத்த சித்தன்ஜி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து கால் முறிவு
சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக படு மோசமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் நிலை…
சாலைகளை சீரமைத்து பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி காவேரிப்பாக்கம் பகுதிகளில் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஓச்சேரி அடுத்த சித்தன்ஜி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கரண் (வயது 31) நிலை தடுமாறி கீழே விழுந்ததால் அவர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அவளூர் காவல்துறையிக்கும் ஆம்புலன்ஸ்கும் போன் செய்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆங்காங்கே நடைபெறுவதால் சிறிய சாலை வழியாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனத்தை இயக்க முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன…
இதனால் உடனடியாக சாலைகளை சீரமைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்