எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா
எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா
பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தலைமை தாங்கினார்.
பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்திஜி திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
CATEGORIES சென்னை