அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு
மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவில் பெண் மருத்துவரை படுகொலை செய்த சம்பவத்தையொட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு…
மேற்குவங்க மாநிலமான கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பெண் மருத்துவரை படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஒரு நாள் வேலை புறக்கணிப்பு போராட்டம் கண்டன பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று உதகை புளுமவுண்டன் பகுதியில் உள்ள அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஆய்வின்போது உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் மருத்துவர் வினோத், மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், நகர காவல் துணை கண்காணிப்பாளர் யசோதா, டி3 காவல் ஆய்வாளர் மீனா பிரியா, பி1 காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.