அரையபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டியாகம் ஏராளமானோர் பங்கேற்பு
அரையபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டியாகம் ஏராளமானோர் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அரையபுரம் கேட்டுத்தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு வங்காரம்பேட்டை வீர பெருமாள் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், பெண்கள் சீர்வரிசை தட்டு தாம்புளம் எடுத்து மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய விதிகள் வழியாக கோவில் வந்தடைந்தனர். பின்னர் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனை,. அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை அரையபுரம் கேட்டுத் தெரு கிராம வாசிகள் செய்து இருந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்