15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
கோபிசெட்டிபாளையத்தில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி 15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
15 வது ஆண்டாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த 16ஆம் தேதி குரு பூஜையுடன் விழா துவங்கியது, தொடர்ந்து நேற்று ஓம் சக்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து செல்லும் ஊர்வலம் நடைபெற்றது,
இந்த ஊர்வலத்தை கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், மழை வளம், இயற்கை வளம் பெறவும் நிலவளம் சிறக்க, பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகள் நிறைய வேண்டிய மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது
அதனைத் தொடர்ந்து அமலா பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் கச்சேரி மேடு, மார்க்கெட், சிக்னல், கோபி பேருந்து நிலையம் வழியாக புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தை அடைந்தது,
இந்த ஊர்வலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து இருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் கஞ்சி கலயம் சுமந்து வழிபாடு செய்து ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தின் போது தலையில் கஞ்சி கலயம் சுமந்து சென்ற பெண்களுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆதிபராசக்தியை வழிபாடு செய்தனர்.