மாவட்ட செய்திகள்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா நடத்திய ஊர் பொதுமக்கள்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா நடத்திய ஊர் பொதுமக்கள்- சுயேட்சையாக வெற்றி பெற்று மக்களின் ஆதரவோடு பஞ்சாயத்து தலைவரான வாலிபரை எம்எல்ஏ தளவாய் சுந்தரம் நேரில் வந்து வாழ்த்தி பாராட்டு..
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமார் என்ற சமூக ஆர்வலர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து 18 வார்டுகள் கொண்டது இதில் 11 வேட்பாளர்கள் சுயேச்சையாக வெற்றி பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் முத்துக்குமார் ஊர் மக்களின் ஆதரவோடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் அவரை எதிர்த்து அதிமுக,திமுக,பாஜக எதிர்த்து போட்டியிடாத நிலையில் பஞ்சாயத்து தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,இந்நிலையில் இன்று தனியார் மண்டபத்தில் வைத்து ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது,இதில் சுயேட்சையாக வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளரும் கௌரவிக்கப்பட்டனர்,மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் வந்து சுயேட்சையாக வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுள்ள சமூக ஆர்வலர் முத்துக்குமாரை பாராட்டி வாழ்த்தினார்.