வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!

வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் கடந்த 16.06.2024 ஆம் ஆண்டு இரு வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயித்து மொத்த திருமணச் செலவையும் மனோன்மணி ஏற்றுக் கொண்டு நடத்தி வைத்தார்.
பெண் வீட்டார் வசதி இல்லாத காரணத்தினால் மனோன்மணி அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைத்து திருமணச் செலவுகள் மட்டும் அல்லாமல் பெண்ணுக்குத் தேவையான திருமண உடைகள், திருமணத்திற்கு பின்பான உடைகள், திருமணத்தின்போது மணப்பெண் அலங்காரம் அனைத்தும் தனது சொந்த செலவில் செய்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
அந்தப் பெண் முத்துலட்சுமி என்பவர் மனோன்மணி வீட்டில் 25 நாட்கள் மட்டுமே அவரது மகனுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு வேறு சில ஆண் நபர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது மனோன்மணி மகனுக்கு தெரிந்துவிட்டது. உடனே அந்தப் பெண் தனது கணவருடன் சண்டையிட்டு அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதையடுத்து மனோன்மணி தரப்பு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளனர். அதன் பின்னர் மனோன்மணி வீட்டில் பெண்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்து பஞ்சாயத்து பேசியுள்ளார்கள்.
அப்பொழுது மணமகன், அந்த பெண்ணுடன் இனி வாழ முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் அவர்களது தாயார் சரஸ்வதி, தந்தை பாண்டுரங்கன் மற்றும் அண்ணன் பாலமுருகன் எனது மகனுக்கு போன் செய்து உன்னை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உன் குடும்பத்தை தூக்கி உள்ளே வைப்பேன் என்று தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
இரண்டு முறை ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மனோன்மணியின் மகனை அழைத்து பேசினார்கள்.
அவரும் அந்த பெண்ணுடன் வாழ முடியாது என்று திட்டவட்டமாக கூறிய காரணத்தினால் மூன்றாவது முறை மனோன்மணி மகன் மீது பொய் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
அந்த குற்ற எண்: 5/2025, ஆகும். மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் 3/ 2025
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே எங்கள் குடும்பத்தின் மீது பொய் புகார் அளித்த முத்துலட்சுமி, பாண்டுரங்கன், சரஸ்வதி, பாலமுருகன் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து தகுந்த குற்ற நடவடிக்கை எடுக்கும்படி தங்களது கோரிக்கை மனுவில் மனோன்மணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இந்த மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.