BREAKING NEWS

காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்து கோழி பண்ணை நாசம்: 1500 கோழிகள் இறந்த பரிதாபம்!

காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்து கோழி பண்ணை நாசம்: 1500 கோழிகள் இறந்த பரிதாபம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்ததால் இரவோடு இரவாக தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியதால் அருகில் இருந்த கோழிப்பண்ணை சேதமடைந்தது. இதிலிருந்த 1500 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு கனமழை வேலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் காட்பாடி வட்டம், சக்கரா குட்டை ஏரி நள்ளிரவில் திடீரென உடைந்தது.

ஏரியில் இருந்த தண்ணீர் பெருக்கெடுத்து அருகில் இருந்த கரிகிரி ஊருக்குள் புகுந்தது. இதில் கரிகிரியில் இருந்த கோழிப்பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் சுமார் பத்து நாட்களுக்குள் இறைச்சிக்கு தயாராக இருந்த கோழிகள் சுமார் 1500க்கும் மேற்பட்டவை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.

இது தெரியாமல் கோழிப்பண்ணையின் உரிமையாளர் சேரன் என். கௌதமன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் நேற்று முன் தினம் அதாவது 19ஆம் தேதி காலை 6 மணிக்கு கோழிப்பண்ணைக்கு வழக்கம் போல் வந்து மின் விளக்குகளை அணைப்பதற்கு வந்தனர்.

அப்போது கோழிகள் 1500க்கும் மேற்பட்டவை வெள்ள நீரில் மிதந்தபடி உயிரிழந்து கிடந்தன. இதைப் பார்த்ததும் கோழிப்பண்ணையின் உரிமையாளர் சேரன் என். கௌதமன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் பதறி துடித்தனர்.

மொத்தம் 7500 கோழிகள் இந்த பண்ணையில் மூன்று பிரிவுகளாக பிரித்து வளர்க்கப்பட்டு வந்தன. இந்த கோழிகளில் 1500 கோழிகள் இருந்ததால் அவர்கள் சொல்லொனா துயரம் அடைந்தனர்.

அத்துடன் கோழிப்பண்ணையில் வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருட்கள், தீவனம், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களும் மழை நீரில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீதம் இருந்த 6000 கோழிகளை மேடான பகுதியில் இருந்த கோழிப்பண்ணைக்குள் அதனை பாதுகாப்பாக பணியாட்களை வைத்து பாதுகாப்பாக அடைத்தார் கோழிப்பண்ணையின் உரிமையாளர் சேரன் என். கௌதமன்.

இந்நிலையில் ஏரி உடைப்பால் தனது கோழிப்பண்ணையில் சேதமடைந்தது மற்றும் இழப்பீடு தர வேண்டும் தமிழக அரசு என்று வலியுறுத்தி கரிகிரி கிராம நிர்வாக அலுவலர் சரவணனை நேரில் சந்தித்து கோழிப்பண்ணையில் ஏற்பட்ட சேதம் குறித்து தாங்கள் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி தனக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சேரன் என். கௌதமன் அளித்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர், தான் இந்த மனுவை காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனுக்கு அனுப்பி விடுவதாகவும், அவரை நேரில் சென்று பார்த்து நீங்கள் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர் கழுவிய மீனில் நழுவிய மீனாக தப்பிவிட்டார்.

இதையடுத்து செய்வதறியாது திகைத்து கொண்டுள்ளார் கோழிப்பண்ணையின் உரிமையாளர் சேரன் என். கௌதமன். ஏரி உடைப்பு இயற்கையாக இயற்கையின் சீற்றத்தால் உடைந்தது குறிப்பிடத்தக்கது. அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்பது கோழிப்பண்ணை உரிமையாளரின் வேண்டுகோளாக உள்ளது.

தமிழக அரசு பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமா? அல்லது இழுத்தடிக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS