BREAKING NEWS

பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவது, சிஎம்சி மருத்துவ கழிவுகள் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படுமா

பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவது, சிஎம்சி மருத்துவ கழிவுகள் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படுமா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இருந்து தோல் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் இந்த பாலாற்றில் கலந்து விஷமாக கண்ணுக்கு தெரியாமல் மாறி வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நீரில் உயிர் வாழும் உயிரினங்கள் அழிவதோடு மட்டுமின்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அதோடு மட்டுமன்றி மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான நீரும் உபயோகப்படுத்த முடியாமல் விஷமாக மாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசு இயந்திரங்கள் அமைதி காத்து கைகட்டி வாய் பொத்தி தொழிற்சாலை நிர்வாகத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு எதுவுமே நடக்காதது போல இருந்து வருகின்றனர்.

நிலத்தடி நீரும் மெல்ல மெல்ல உருமாறி வருவதையும் காணமுடிகிறது என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு நீர் மிகவும் ஆபத்தானது.

இதை சத்தம் இன்றி பாலாற்றில் கலந்து விட்டு ஒன்றுமே அறியாதவர்கள் போல தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இருந்து கொள்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவில் செயல்படுகிறதே தவிர இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் குறிப்பாக கடுமையான நடவடிக்கையை எடுத்ததாக எந்தவித தகவலும் கிடையாது. அவர்கள் அவர்களது பங்கிற்கு வசூல் செய்து கொண்டு காலத்தை கடத்தி வருகின்றனர்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தவறு செய்யும் தோல் தொழிற்சாலைகளை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்ததாக இதுநாள் வரை ஒரு தகவலும் கிடையாது. இதுதான் இன்றைய தமிழகத்தின் பரிதாப நிலை என்று சொல்ல வேண்டும். அரசு அலுவலர்கள் நேர்மையாக நியாயமாக நடந்து கொண்டால் பொதுமக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

அரசு அதிகாரிகள் நேர்மை, உண்மை, சத்தியம் ஆகியவற்றை மீறி செயல்படுவதால் பொதுமக்கள் இனி மெல்ல சாவார்கள் என்று அடித்து கூறலாம். அரசு மக்களுக்காக செயல்படுகிறதா? அல்லது தனியார் முதலாளிகளுக்காக செயல்படுகிறதா? என்பதை தெளிவுபடுத்தினால் மிகவும் நலம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

இனிவரும் காலங்களிலாவது அரசு தவறு செய்யும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமா? அல்லது மீண்டும் பழையபடி அமைதி காக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வேலூர் பாலாற்றின் மீது நடைப்பயிற்சி மேற்கொண்டார் அப்போது இதை கண்டும் காணாமல் சென்று விட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

CATEGORIES