BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் போராட்டம்.

திருச்சி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் போராட்டம் – காலி குடங்களுடன் ஊராட்சி மன்றம் அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம்,
முசிறி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் காவிரி குடிநீர் வாரம் ஒருமுறை வழங்கப்படுவதாகவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி ஒன்றிய ஆணையர் ராஜ்மோகன், காவிரி கூட்டு குடிநீர் வழங்கல் துறை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை ஏற்று கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயரதிகாரிகள் வந்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முசிறி டிஎஸ்பி அருள்மணி தாசில்தார் புஷ்பராணி குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் நடராஜன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு குடிநீர் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது சம்பந்தமாக சனிக்கிழமை அமைதிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டம் காலை பத்தரை மணி முதல் பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )