மாவட்ட செய்திகள்
தோழிகளிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனவேதனை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
தஞ்சை மானம்புச்சாவடி ஆடக்கார தெருவை சேர்ந்தவர் தர்மராஜா. இவரது மகள் கலைவாணி (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக தோழிகளுடன் கலைவாணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் மன வேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தஞ்சை கிழக்கு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கலைவாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.