மாவட்ட செய்திகள்
தஞ்சையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.
தஞ்சையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் ரோட்டரி சங்கங்கள் ஏற்பாடு.
தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி இணைந்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்க தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக் தலைமை வகித்தார். முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார். முகாமில் பரிசோதனை கருவிகள் அடங்கிய சிறப்பு பேருந்து மற்றும் மருத்துவ குழுவினர் கள் உதவியுடன் ஏராளமான மகளிர்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பது குறித்து சிறப்பு பரிசோதனை செய்யப்பட்டது. பதிவாளர் டாக்டர் ஸ்ரீவித்யா, மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் மோகனசுந்தரம், டாக்டர்கள் தமிழ்வாணன், கிருஷ்ணகுமார், சேது ராஜன், பி.ஆர்.ஒ. இளங்கோ மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டாக்டர் சந்தானசாமி தலைமை வகித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.