மாவட்ட செய்திகள்
திருச்சியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட், மாதர் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி உறையூர் பகுதியில் டாஸ்மார்க் கடை புதிதாக வருவதை கண்டித்து அப்புறப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடையின் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உறையூர் சாலை ரோடு பகுதியில் அதிகமான மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் பெண்கள் இயல்பாக சாலையை நடந்து செல்ல முடியவில்லை. சாலைகளில் செல்லும் போக்கு வரத்துக்கு அதிகமாக இடையூறுகள் ஏற்படுகிறது.
தினமும் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையில் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் விட்டு விட்டோம் ஆனாலும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்து இருந்தது. அதனை பார்த்த போது மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்பதனை வலியுறுத்தி என்பதை போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு எங்கள் போராட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டும் இந்த புதிய டாஸ்மாக் கடையை திறக்க கூடாது இவ்வாறு என கோரிக்கை வைத்தனர். இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கலந்துகொண்டு கடையை அப்புறப்படுத்தக் கோரி கோரிக்கை வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.