மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தள்ளுபடியில் வட்டியில்லா மாட்டு லோன் வழங்குவதாக தேர்தலுக்கு முன் திமுக-வினர் அறிவித்திருந்ததை அடுத்து குவிந்த பொதுமக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தள்ளுபடியில் வட்டியில்லா மாட்டு லோன் வழங்குவதாக தேர்தலுக்கு முன் திமுக-வினர் அறிவித்திருந்ததை அடுத்து குவிந்த பொதுமக்கள். பணியாளர் பற்றாக்குறையால் திணறியது கூட்டுறவு சங்க அலுவலகம்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (ஏ-2971) செயல்பட்டு வருகிறது 18-வார்டுகள் அடங்கிய இந்த சங்கத்தில் நடந்து முடிந்த நகர்புறஉள்ளாட்சி தேர்தலின் போது பொது மக்களின் வாக்குகளை பெற தேர்தல் முடிந்தவுடன் வீடுகள் தோறும் தள்ளுபடி செய்யும் வகையில் வட்டியில்லா மாட்டுலோன் வழங்கப்படுமென சில திமுக முக்கிய நிர்வாகிகள் கூறி இருந்ததால் தேர்தல் முடிவுற்ற நிலையில் நேற்றும் இன்றும் அப்பகுதி பொதுமக்கள் வட்டியில்லா மாட்டு லோன் வாங்குவதற்காகவும் உறுப்பினர்களாக சேர்வதற்காகவும் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் கூட்டம் கூட்டமாக வந்து பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கவும் பதிவுசெய்யவும் பொது மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்யவும் வெறும் 2 பணியாளர்கள் மட்டுமே உள்ளதாகவும் போதிய பணியாளர்கள் மட்டுமின்றி கடந்த ஓராண்டாக நிரந்தரமான கூட்டுறவுச் சங்க செயலாளரும் இல்லாததால் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் அனைத்து வகையான சேவைகளும் சரியான பயனாளிகளுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட வார்டு பகுதி மக்களுக்கு மட்டும் மாட்டுலோன் வழங்கப்பட்டதாகவும் திரும்ப கட்டாத நிலையில் மீண்டும் அவர்களுக்கே வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அதனை தவிர்த்து அணைத்து வார்டு பகுதி மக்களுக்கும் தகுதியான பயணாளிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.