தலைப்பு செய்திகள்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக்குழு கூட்டம் கும்பகோணம் ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.பாலு தலைமையில் நடைபெற்றது.

உறுப்பினர் பதிவு மற்றும் எதிர்கால இயக்கம் குறித்து சங்கத்தின்
மாவட்ட செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் பேசினார். கூட்டதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கு. வாசு, சி.ராயப்பன், பொ.வடிவேல், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாதர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் வசந்தி வாசு வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் கிழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.எதிர் வரும் 15/03/2022 அன்று நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.600/- வழங்கிட கோரியும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கிட கோரியும் ஒன்றிய அரசு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
