BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மகாராஷ்டிராவில் இருந்து வருகை புரிந்த குழுவினரை பள்ளியின் தலைமையாசிரியர் ஆர் பிச்சை வரவேற்றார்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானேவில் இருந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளை பார்வையிட 25 பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்திருந்தனர்.

மகாராஷ்டிராவில் இருந்து வருகை புரிந்த குழுவினரை பள்ளியின் தலைமையாசிரியர் ஆர் பிச்சை வரவேற்றார். தேசிய மாணவர் சங்கம் , செஞ்சிலுவை சங்கம், சாரண சாரணியர் இயக்கம், மாணவர் காவல் படை, தேசிய பசுமைப்படை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருந்து வருகைபுரிந்த சுபாஷ் பவார் துணை தலைவர் ஜில்லா பரிஷத், லலிதா சஹாஜி மாவட்ட கல்வி அலுவலர் , சிந்தாமணி வாங்கடே ஜில்லா பரிஷத் உறுப்பினர், பிரகாஷ் டீமேட் ,நிர்வாக அதிகாரி ஜில்லா பரிஷத் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரத்தை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக பள்ளியில் அரசின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படும். 14 வகையான பொருட்களை பற்றியும் கல்வி உதவிகளை பற்றியும் அதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் எவ்வாறெல்லாம் உயர்ந்துள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.

மேலும் தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை மாணவர்கள் எவ்வாறு எல்லாம் உபயோகப்படுத்துகின்றனர் என்பது குறித்து மாணவர்களிடம் செயல்முறை விளக்கமாக கேட்டறிந்தனர். தமிழக மாணவர்கள் மடிக்கணினி உபயோகப்படுத்துவதை பார்த்து வியந்தனர் இதன் தொடர்ச்சியாக பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு கழிப்பறைகள் நூலகம் அறிவியல் ஆய்வகங்கள் போன்றவற்றை பார்வையிட்டனர்.

அரசின் நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தனர், தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு சூழ்நிலையும் வெகுவாக பாராட்டினர் பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் தமிழக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் பாராட்டி சென்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )