மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் சிறிய மாட்டு வண்டி பெரிய மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது இப்போட்டியில்
சிறிய மாட்டுவண்டி 38 ஜோடிகள் கலந்து கொண்டது 6 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதே போல் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 ஜோடிகள் கலந்து கொண்டது இதற்கு 10 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 35 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்போட்டியின் அருகிலுள்ள
கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாட்டுவண்டி வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
