மாவட்ட செய்திகள்
ராமலிங்கம் எம்எல்ஏ Vs ராஜேஸ்குமார் எம்பி!

நாமக்கல் திமுக எம்எல்ஏ-வான பெ. ராமலிங்கத்துக்கும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்பி-யுமான கே.ஆர்.என். ராஜேஸ்குமாருக்கும் ஏழாம் பொருத்தம். அண்மையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஜேஸ்குமாரும், அமைச்சர் மதிவேந்தனும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இருவருமே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதேசமயம், தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தும் ராமலிங்கத்தை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லையாம் அதிகாரிகள். அமைச்சர் வராததால் ஆட்சியரே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எதார்த்தமாக ஆட்சியர் அலுவலகம் வந்த ராமலிங்கம், தனக்கே தெரியாமல் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பதைப் பார்த்து கொதித்து விட்டாராம். “யார் பேச்சைக்கேட்டு நீங்க இப்படி நடந்துக்குறீங் கன்னு எனக்கும் தெரியும்” என அங்கிருந்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை ஏகத்துக்கும் எகிறிவிட்டுக் கிளம்பினாராம் ராமலிங்கம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
