தலைப்பு செய்திகள்
பெங்களூர் அணியின் புதிய கேப்டன்.. அறிவித்தது ஆர்.சி.பி..!
15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மே மாதம் 29-ம் தேதி முடிவடைகிறது. வரும் 26-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனை மார்ச் 12-ம் தேதி அறிவிப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணி டு பிளெஸ்சிசை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் இருவரும் அணியை வழிநடத்த போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய டு பிளெசிஸின் அனுபவம்தான் டு பிளெசிஸை கேப்டனாக நியமிக்க உதவியது.