BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வில் ஈடுபட்டதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு முதல்வர் விருது.

 

முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வில் ஈடுபட்டதற்காக
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுக்கு முதல்வர் விருது.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில் சிறப்பாக மேற்கொண்டதற்காக 2022 ஆம் ஆண்டிற்கான விருதினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசிற்கு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில்
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு
தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் முனைவர் ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை
முதல்வரின் முகவரி துறையின் மூலம் கடந்த வருடம்
மே மாதம் முதல் முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள்
70833 .

இதில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை
39029மனுக்கள்
55.1சதவீதமாகும்,

இதில் தள்ளுபடி செய்யப்பட்டவை 23590மனுக்கள். 33.3 சதவீதமாகும்,

தற்போது
நடவடிக்கையில் உள்ளவை
8214 மனுக்கள் 11.60 சதவீதமாகும்,

ஏற்கப்பட்ட மனுக்களில் வழங்கப்பட்ட உதவிகள்/நடவடிக்கைகள்
மாதாந்திர உதவித்தொகை 5990 பேர் வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்றவர்கள் 2110பேர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்கள், மூன்று சக்கர வண்டிகள் , உதவித்தொகை,
வேலை நாடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான இலவச பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )