தலைப்பு செய்திகள்
9ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்? – திருச்சியில் அதிர்ச்சி..!
திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்ததாக பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியில் சென்ற மாணவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாணவரை தேடிப்பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே மாணவர் படித்து வந்த பள்ளியின் 26 வயது பெண் ஆசிரியையும் மாயமாகி இருந்தார்.
இது தொடர்பாக நேற்று மாணவரின் பெற்றோர் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர். இதனையடுத்து மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரித்தபோது, அதே நாளில் ஆசிரியையும் மாயமானது தெரியவந்தது. ஆனால் ஆசிரியை மாயம் தொடர்பாக இதுவரை போலீசில் புகார் வரவில்லை.
துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை எம்ஏ பிஎட் படித்துவிட்டு கடந்த 6 ஆண்டாக பணியாற்றியது தெரியவந்தது. மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என்ற தெரியவந்தது. இது பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.