தலைப்பு செய்திகள்
சென்னையில் சூப்பர்.. 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று திறப்பு.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் சேவை தொடர்ந்து நடைபெற்றாலும், பல இடங்களுக்கு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னைவாசிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடிகிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை (9 கி.மீ.) மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
இதன்மூலம், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.