BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் காட்டமான பதிலடி.

சென்னை பட்டினம்பாக்கத்தில் 24ஆவது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 1.33 கோடி இரண்டாம் தவணை செலுத்திகொள்ள வேண்டியவர்களை இலக்காக வைத்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றார்.

மேலும் அரசின் சார்பில் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பூஜ்ஜியத்தை நோக்கி வந்தாலும் ஓரிரு மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுள்ள 8.55 லட்சம் பேரில் 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டங்களில் இல்லாத சூழலில் இன்று சற்று தடுப்பூசி செலுத்தும் பணி குறைவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது, சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )