மாவட்ட செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள கங்கன் குளத்தில் 11வது ஆண்டு அன்னை மரியாள் கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள கங்கன் குளத்தில் 11வது ஆண்டு அன்னை மரியாள் கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கங்கன் குளத்தில் 11வது ஆண்டு அன்னை மரியாள் கபடி குழு சார்பில் மின்னொளி கபடி போட்டிகள் கங்கன்குளம் அதிமுக கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. கபடி போட்டியில் தென்காசி மாவட்டம் நெல்லை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் மதுரை மாவட்டம் தேனி மாவட்டம் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 40 அணிகள் பங்கேற்றனர். நேற்று இரவு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் இனாம் மணியாச்சி மற்றும் கிளை செயலாளர் மகேஷ் குமார்,தோணுகால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடலட்சுமி சீனிவாசன், ஆலம்பட்டி காலனி அதிமுக கிளைச் செயலாளர் முருகேசன், தோணுகால் அதிமுக கிளைச் செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் பிரபாகரன், ஆலம்பட்டி வடக்கு அதிமுக கிளைச் செயலாளர் சுந்தர், ஆலம்பட்டி தெற்கு அதிமுக கிளைச் செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோபி,முருகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
