மாவட்ட செய்திகள்
உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்.

உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்து உள்ளது. இங்குள்ள அமணலி ங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது. இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கோவில் மற்றும் அருவியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
