BREAKING NEWS

சினிமா

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் காலமானார்.

ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட். இவர், கிஸ் ஆஃப் த ஸ்பைடர் வுமன், சில்ரன் ஆஃப் எ லீசர் காட், பிராட்காஸ்ட் நியூஸ், டார்க் சிட்டி, சன்ஷைன், எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ், பிளாக் விடோ உட்பட பல முக்கியமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்த ’தி கிங்ஸ் டாட்டர்’ படம், கடந்த ஜனவரி மாதம் வெளியானது. பல டிவி தொடர்களில் நடித்துள்ள, வில்லியம் ஹர்ட், கிஸ் ஆஃப் த ஸ்பைடர் வுமன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆஸ்கர் விருது பெற்றவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். தனது பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியம் ஹர்ட் மறைவை அடுத்து ஹாலிவுட் திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )