மாவட்ட செய்திகள்
நெல்லை மாவட்டம்இடிந்தகரை மீனவர்களால் சேதபடுத்தப்பட்ட குமரி மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு:பங்குதந்தைகள் கன்னியாகுமரி டிஎஸ்பி ஆபீஸில் மனு.
இடிந்தகரை மீனவர்களால் சேதபடுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு பெற்றுதர வேண்டி கன்னியாகுமரி டிஎஸ்பி ஆபீஸில் பங்குதந்தைகள் மனு அளித்தனர்.
ஆரோக்கியபுரம் பங்குதந்தை ரால்ப்மதன்,புதுகிராமம் பங்குதந்தை நியுமன் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள் நேற்று கன்னியாகுமரி டிஎஸ்பி ஆபீஸில் கொடுத்த மனுவிபரம்:-
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம்,புதுகிராமம்,மணக்குடி,பள்ளம் ஆகிய மீனவகிராமத்தை சேர்ந்த 39 மீனவர்கள்
நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இடிந்தகரையை சேர்ந்த பிரபு மற்றும் முருகன் தலைமையில் சுமார் 30 மீனவர்கள் மூன்று படகுககளை வன்முறையாக, ஆயுதங்களை பயன்படுத்தி தொழில் செய்யவிடாமல் இழுத்துச் சென்று மீன்பிடி வலைகளை (மட்டுகள்) சேதப்படுத்தி கடல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் பலத்த பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது.எனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை எந்த நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.மேலும்
எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புகளுக்கும் நஷ்ட ஈடு செய்து தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.