BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே பட்டாசு தயாரித்தபோது வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுமி சாவு.

நாகர்கோவில் அருகே ஆறு தெங்கன் விளை என்ற இடத்தில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்தபோது அது வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 வயது சிறுமி இறந்து போனார் அவரது தாயார் காயமடைந்தார்

நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் அடுத்து ஆறு தெங்கன் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பாக்கியராஜா ( வயது 40) இவரது மனைவி பார்வதி ( வயது 32) இவர்களது மகள் ஸ்ரீ வர்ஷா ( வயது 10) இவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார். பாக்கியராஜா கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்று இரவு அவர் கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தார் அப்போது வெடிமருந்து திடீரென வெடித்து சிதறியது இதில் அவரது வீட்டின் சுவர் இடிந்து அவரது பத்து வயது மகள் ஸ்ரீ வர்ஷா மீது விழுந்தது இடிபாடுகளில் சிக்கிய ஸ்ரீ வர்ஷா இறந்துபோனார் அவரது தாயார் பார்வதி காயமடைந்தார் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜாக்கமங்கலம் போலீசாரும் வெடிமருந்து நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் இதில் அவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )