BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு.


உடுமலை நகரில் பொள்ளாச்சி-பழனி சாலை, தளி சாலை, திருப்பூர் சாலை, ராஜேந்திரா சாலை, தாராபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அன்றாடம் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் உடுமலை நகரில் போக்கு வரத்தை சீர் செய்யவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நகர்மன்ற அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார். இதில் நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ், போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் செய்தியாளர்களிடம் கூறியது*
உடுமலை மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தளி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து நெறிசல்கள் ஏற்பட்டு வருகிறது. இதை குறைக்க உடுமலை நகரில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்து தரப்படும். குறிப்பாக தளி* சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை* எடுக்கப்படும் மேலும் உடுமலை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கி ரமிப்புகளும் சமரசம் இன்றி அகற்றப்படும் என்றார்
இந்நிலையில் வாரச் சந்தை, பாதாளச் சாக்கடை பணிகள், கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை, பழனி ஆண்டவர் நகர் ரயில்வே சுரங்கப் பாதை ஆகியவற்றை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் இன்று ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் சத்யநாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்*

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )