மாவட்ட செய்திகள்
நாஞ்சிகோட்டை ஊராட்சி பார்வதி நகர் பகுதியில் குப்பைகள் கொட்ட குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு.
நாஞ்சிகோட்டை ஊராட்சி பார்வதி நகர் பகுதியில் குப்பைகள் கொட்ட குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு
சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தஞ்சை ஊராட்சி ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை கிராம ஊராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும், மற்றும் மக்காத குப்பைகள் பார்வதி நகரில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 589 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் தள்ளு வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தூய்மைப் பணியாளர்கள் தெருத்தெருவாக சென்று தள்ளுவண்டிகளில் வீடுகளில் உள்ள குப்பைகளை வாங்கி அதில் சேகரித்துக்கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து, அவைகள் உரங்கள் மற்றும் 43 வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்தும் சந்தை படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சி பகுதியில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் மற்றும் கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பார்வதி நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டப்படுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்தனர். சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட காஞ்சிக் கோட்டை ஊராட்சி பார்வதி நகர் பகுதியில் உள்ள இடத்தில் நேற்று காலையில் இருந்து குப்பைகள் கொட்டும் பணி தொடங்கப்பட்டன. இதனை அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் திடீரென ஒன்று திரண்டு, அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உதவியுடன் தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பார்வதி நகர் குடியிருப்பு வாசிகள் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சிகோட்டை பைபாஸ் கீழ் பாலத்தின் தார் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலெக்டரின் உத்தரவுப்படி பாரதி நகர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் எவ்வித இடையூறும் ஏற்படாது. இப்பகுதியில் சுற்றுச் சுவர் எடுத்து தான் குப்பைகள் தரம் பிரிக்கப்படும் வேலைகள் நடக்கும். எனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தான் குப்பைகள் கொட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
பார்வதி நகர் பகுதி அருகில் 15 வருடத்திற்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். மேலும் கோவில்கள், பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என பல்வேறு கட்டிடங்கள் உள்ளன.
இப்பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இங்கு குப்பைகள் தொடர்ந்து கொட்டி வந்தாள் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாற்று இடத்தை தேர்வு செய்து, அங்கு குப்பைகளை கொட்ட வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனால அதிகாரிகளுக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி விடுகிறோம். எனவே நீங்கள் சாலைமறியலை கைவிடுமாறு அதிகாரிகள் கூறினர். இதற்கு குப்பைகளை அள்ளி நாள் தான் மறியலை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினார். இதன் பின்னர் பாரதி நகரில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.