மாவட்ட செய்திகள்
தஞ்சை பெரிய கோயில் அருகில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எறும்பு மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை பெரிய கோயில் அருகில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எறும்பு மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் கன்னியூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். டிரைவர். இவரது மகள் யோகஸ்ரீ (18). தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை பெரியகோயில் அருகில் மாணவி யோகஸ்ரீ எறும்பு மருந்தை தின்று மயங்கி விழுந்துள்ளார்.
உடன் அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வகுப்பு தோழிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவி யோகஸ்ரீ எறும்பு மருந்தை தின்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.